News September 6, 2025

சேரன்மகாதேவியில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (செப்.6) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்ட பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினர். இதில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 6, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News September 6, 2025

நெல்லையில் இலவச டோல்கேட் அனுமதி கேட்டு கோரிக்கை

image

திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நாளை நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களை போக, வர டோல்கேட்டில் ஃப்ரீயா அனுமதிக்க கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடிதம் கடிதம் எழுதி உள்ளது. நாங்குநேரி டோல்கேட் வாகைகுளம் டோல்கேட் கயத்தார் டோல்கேட் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்து செல்ல இலவச அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

News September 6, 2025

நெல்லையில் உயர்ந்த பஸ் கட்டணம்

image

ஓணம் பண்டிகை- மிலாடி நபி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து நெல்லை வந்தவர்கள் நாளை மாலை சென்னைக்கு திரும்ப முன்பதிவு செய்து வருகின்றனர். வழக்கமான ரயில் பாஸ்களில் இடங்கள் நிரம்பிய நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூ.1,900 முதல் ரூ.3,700 வரை வசதிக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!