News March 21, 2026
சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள IPL ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ROAR 26 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுடன் அவர் பங்கேற்க உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி SK ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News March 26, 2026
BREAKING: புதுச்சேரி விசிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து, வி.சி.க தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஊசுடு – பெ.அரியபுத்ரி (அரிமாத்தமிழன்), நெட்டப்பாக்கம் – ப. அமுதவன், உழவர்கரை – செல்வ. புஷ்பலதா அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 26, 2026
Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு www.truecaller.com இணையதளத்துக்கு செல்லுங்கள். ➤இதில் ’i want to unlist’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நம்பரை உள்ளிட்டால் உங்கள் Contact Truecaller-ன் தரவுகளில் இருந்து நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் போன் நம்பர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால், அதனை Change My Name என்ற ஆப்ஷன் மூலம் மாற்றலாம். SHARE.
News March 26, 2026
ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை?

பாஜக சார்பில் யார் யார் வேட்பாளர்கள் என்பது தொடர்பாக, சென்னையில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் பாஜகவுக்கு ஒரே ஒரு தொகுதி அதிமுக ஒதுக்கி உள்ளது. அதிலும் வானதி போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலை இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


