News October 23, 2025
சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவு: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

சேந்தமங்கலம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் மறைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News October 24, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.23 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 23, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 23) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 24) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 23, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.10.2025) இரவு ரோந்துப் பணிக்குக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைக்கு உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.