News May 25, 2024

சேத்துப்பட்டு: கார் மோதி விபத்து

image

தி.மலை மாவட்டம் செங்கோட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி. நேற்று மாலை வேலை முடித்துவிட்டு அனாதிமங்கலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News March 9, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

தி.மலை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

தி.மலை: கைக்குழந்தையுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

image

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பெரியார் தெருவை சேர்ந்த நடராஜன் (38), அவரது மனைவி பிருந்தா (28) ஆகியோர் தொழில் தொடங்க தாட்கோவில் கடனுக்கு முயற்சி செய்துள்ளனர். லோன் கிடைக்க தாமதமானதால், கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 9) மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களைத் தடுத்து, கைது செய்தனர்.

error: Content is protected !!