News February 2, 2025

சேத்தியாத்தோப்பு: பாலத்தில் மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

image

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் வனத்தையன் மகன் பரிசுத்தராஜா. இவர் நேற்று முன்தினம் மாலை அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிசுத்தராஜா உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

கடலூர்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News March 1, 2026

கடலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய இரண்டு நாட்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இந்த நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!