News October 6, 2024
செஸ் போட்டியில் கோப்பையை வென்ற மாணவி

சேலம் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய சேலம் உடையாப்பட்டி கைலாஷ் மான்சரோவர் சிபிஎஸ்இ பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி மோஷிகா, கோப்பையும் மற்றும் சான்றிதழையும் பெற்றார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.26) இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) ரத்துச் செய்துள்ளது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 26, 2025
சேலத்தில் மட்டும் 80,277 மனுக்கள் கலைஞர் உரிமைத்தொகை!

சேலம் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி வரை உங்களைத் தேடி அரசு எனும் திட்டத்தின் கீழ் புதிதாக அறிவிக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 150 நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மட்டும் தமிழக அரசின் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 80,277 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
25 நாட்கள் 150 முகாம்கள் 1,50,640 மனுக்கள்!

சேலத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெற்ற 150 முகாம்களில் அறிவிக்கப்பட்ட துறைகளின் வாயிலாக 45,409 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் 24 ஆயிரத்து 954 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 70 ஆயிரத்து 363 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல்வேறு உதவித்தொகைகள் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 640 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.