News January 30, 2026

செவ்வாய் கிரகத்தில் தண்ணீரா? நாசா புது தகவல்

image

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை வடிவத்தில் உள்ள பாறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் மற்றும் கனிமங்கள் இருந்திருக்கலாம் எனவும், இந்த பாறை பூமியில் உள்ள பாறை போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 8, 2026

புதிய மாவட்டம்.. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக

image

திமுக ஆட்சிக்கு வந்ததும் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தற்போதைய பழனி MLA செந்தில்குமார் உறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கும் நிலையில், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்தும், பழனி மாவட்டத்தை அறிவிக்கக் கோரியும் பிப்.10-ல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக, பாஜக அறிவித்துள்ளன.

News February 8, 2026

திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு

image

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நட்சத்திரங்களை களமிறக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பேசினார். அப்போது, 2026-ல் திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறுவது நிச்சயம்; அதற்குமேல் வெல்வது லட்சியம் என்றும் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமையும் எனவும் தெரிவித்தார்.

News February 8, 2026

பிப்ரவரி 8: வரலாற்றில் இன்று

image

1936 – ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1971-ல் உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தையான NASDAQ தொடங்கப்பட்டது
தேசிய சிறுவர் சாரணர் தினம் – பிப்ரவரி 8
1897 – இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ஜாகிர் உசேன் பிறந்த நாள்.
1963- இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி முகமது அசாருதின்
1964 – இயக்குநர் சந்தோஷ் சிவன் பிறந்த தினம்

error: Content is protected !!