News April 29, 2025
செவ்வாய்க்கிழமையில் போக வேண்டிய அம்மன் கோயில்கள்

▶அத்திப்பட்டு எல்லையம்மன் கோயில், ▶ஆரணி காணியம்மன் கோயில், ▶ஆவடி முத்துமாரியம்மன் கோயில், ▶கும்மிடிப்பூண்டி அஞ்சல் கன்னியம்மன் கோயில், ▶திருத்தணி தணிகாச்சலம்மன் கோயில், ▶திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், ▶பட்டாபிராம் நாகவல்லியம்மன் கோயில், ▶பழவேற்காடு தர்மராஜா கோயில், ▶பொன்னேரி மாரியம்மன் கோயில், ▶பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், ▶திருப்பாலைவனம் ஆலையம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 29, 2025
போலி தங்கம் விற்று மோசடி: அக்கா, தம்பி சுற்றிவளைப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் அறிமுகமாகி, தங்களிடம் அரைகிலோ தங்கக்கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா தனது அண்ணன் இர்பானிடம் தெரிவிக்க, இர்பான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, போலீசார் தங்கக்கட்டி வைத்திருந்த அக்கா, தம்பியை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அது பித்தளை என்பது தெரியவந்தது.
News April 29, 2025
ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
News April 28, 2025
திருவள்ளூர் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 580 மனுக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திங்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 580 மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிலம் சம்பந்தமாக 85 மனுக்கள், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 96 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 225 மனுக்கள், பசுமை வீடு 45 மனுக்கள், இதர துறை சார்பாக 129 மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான தீர்வு விரைவில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.