News July 10, 2025

செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

image

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 10, 2025

கூடங்குளம் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

image

நெல்லை, கூடங்குளம் அருகே காமநேரியிலிருந்து கொத்தங்குளம் சென்ற மினி வேன், மாடு சாலையில் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 10, 2025

படகில் தவெக விளம்பரம்; கூட்டப்புளி விவகாரத்தில் திடீர் திருப்பம்

image

நெல்லை கூட்டப்புளியில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் இருந்த நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. தவெக பெயரை நீக்கினால் தான் மண்ணெண்ணை வழங்கப்படும் என கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மண்ணெண்ணெய் வழங்கியதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

News July 10, 2025

நெல்லை: ஆசிரியர் வேலை வேண்டுமா?

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (நெல்லையில் ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு முடிந்தால் ஒரு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!