News February 27, 2025
செவிலியரிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது

பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News April 6, 2026
திருச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
திருச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News April 6, 2026
திருச்சி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருச்சி மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.


