News January 11, 2026

செல்வராகவன் கூறுவது உண்மையா?

image

உங்கள் கவலைகளை யாரிடமாவது சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள். சத்தியமாய் சொல்கிறேன், அதைப் பற்றி அவர்களுக்கு துளியும் கவலை கிடையாது. சரி, நான்கு வார்த்தை நன்றாய் சொல்லிவிட்டு எப்படியாவது அங்கிருந்து ஓடிவிடலாம் என்பதுதான் அவர்கள் குறிக்கோள் என செல்வராகவன் X-ல் பதிவிட்டுள்ளார். அடிக்கடி அட்வைஸ் கொடுத்துவரும் செல்வாவின் இந்த பதிவிற்கு உங்கள் ரியாக்‌ஷன் என்ன?

Similar News

News February 13, 2026

10th போதும், ₹30,000 சம்பளம்.. நாளையே கடைசி

image

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில்(HVF) காலியாக உள்ள 220 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷாட் பிளஸ்டர், மெஷினிஸ்ட், மெட்டீரியல் ஹேன்ட்லிங் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு, ITI கல்வித் தகுதி போதுமானது. சம்பளமாக ₹30,000 வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். பிப்.14-க்குள் <>avnl.co.in<<>> தளத்தில் விண்ணப்பிக்கவும். SHARE.

News February 13, 2026

முத்தத்தில் இத்தனை வகைகளா?

image

*கைகளில்: மரியாதையின் வெளிப்பாடு *நெற்றியில்: இந்த வாழ்நாள் உன்னுடனே என அர்த்தம் *மூக்கில்: ரொம்ப அழகாக இருக்கிறாய் என அர்த்தம் *கன்னத்தில்: உன்னுடன் இருக்கணும் என அர்த்தம் *கண்களில்: உலகில் வேறு யாரையும் இவ்வளவு காதலிக்கவில்லை என அர்த்தம் *உதட்டில்: என் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் என அர்த்தம். இன்னைக்கு கிஸ் டே.. அதனால் முத்தம் கொடுக்க மறந்துடாதீங்க.

News February 13, 2026

CPI-CPM ஒன்று சேரவேண்டும்: வீரபாண்டியன்

image

கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும் என்பதே உலக சிந்தனையாளர்கள் & எளிய மக்களின் விருப்பமும் கூட என CPI வீரபாண்டியன் கூறியுள்ளார். அப்படியொரு சூழல் வருவது நல்லது என்ற அவர், இதை பலமாகவோ பலவீனமாகவோ கருதாமல் காலத்தின் தேவையாக பார்க்க வேண்டும் என்றார். அதேபோல, வலதுசாரி பிற்போக்கு சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமின்றி, முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும் என பேசியுள்ளார்.

error: Content is protected !!