News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 15, 2025

திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், இயற்கை விவசாயம், மற்றும் தேன் சேகரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

News September 15, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஏராளமான பொதுக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் செய்யவும்<<>>. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!