News May 7, 2025
செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதி அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 16, 2025
கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி கலால் துறை அலுவலகத்தில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை, அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
News August 16, 2025
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தேனீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதனை தமிழகத்தை போல திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
News August 15, 2025
புதுச்சேரி: திருமண வாழ்க்கை சிறக்க இந்த கோயில் போங்க!

காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் இந்த அம்மையார் கோயில். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்ததால், இவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். இந்த காரைக்கால் அம்மையாரை திருமணமான பெண்கள் இங்கு வழிபட்டால் அவர்களது திருமண வாழ்வு சிறந்து விளங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. SHARE செய்யவும்