News March 31, 2024

செல்வப் பெருந்தகை பிரச்சார தேதி அறிவிப்பு

image

காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, அவர் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் குரூஸுக்கு ஆதரவாக வருகிற 6 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

நெல்லை: EB பில் அதிகம் வருதா??

image

நெல்லை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News November 9, 2025

நெல்லை முக்கிய ரயில் நவ.30 வரை எழும்பூர் செல்லாது

image

நெல்லை வழியாக சென்னை செல்லும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் எண் 20 636 நாளை 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும் எழும்பூர் செல்லாது மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News November 9, 2025

நெல்லை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

image

பேட்டை எம் ஜி பி 5 வது வடக்கு தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன் (50). இவர் நேற்று முன்தினம் சுத்தமல்லியை சேர்ந்த சிறுமியுடன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மீரான் மைதீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!