News February 5, 2026

செல்லூர் கண்மாய்.. அதிமுக, திமுக போட்டிபோட்டு ஆய்வு

image

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Similar News

News February 6, 2026

மதுரை: லாரி மோதியதில் ஒருவர் பலி

image

சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (37). இவர் தனது டூவீலரில் நேற்று வாடிப்பட்டி சென்று விட்டு, மதுரை – திண்டுக்கல் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ரோட்டை கடந்து பெட்ரோல் வாங்கி கொண்டு சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 5, 2026

மேலூர் அருகே லாரி, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

image

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது  பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

மதுரையில் பரபரப்பு…..12 வயது சிறுவன் தற்கொலை.!

image

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!