News March 11, 2026

செல்போன் Radiation அதிகரித்தால்..

image

செல்போன் கதிர்வீச்சுக்கள் உடல் செல்களை வெப்பமாக்குமாம். அதிகப்படியான கதிர்வீச்சினால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஹார்மோன் மாற்றத்தினால், மன அழுத்தம், பதற்றம் & தூக்கமின்மை பிரச்னைகளும் ஏற்படுமாம். SAR வழிகாட்டுதலின்படி, செல்போன் கதிர்வீச்சு ஒரு கிலோகிராம் திசுவுக்கு 1.6 வாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்க போனின் Radiation-ஐ அறிய, ‘*#07#’ டயல் பண்ணுங்க.

Similar News

News March 31, 2026

ஈரானின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்

image

ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கும் மசோதாவுக்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஈரான் மீது பொருளாதார நெருக்கடி விதிக்கும் USA, இஸ்ரேல் & பிற நாடுகளின் கப்பல்களுக்கு இவ்வழியாக செல்ல தடையும் விதிக்கப்படுமாம். இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸில் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய், LPG-ன் விலை உயரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 31, 2026

வெள்ளி இன்று ₹5,000; இம்மாதம் ₹50,000 குறைந்தது

image

மார்ச் மாதத்தின் கடைசி நாளான இன்று சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹5 குறைந்து ₹250 ஆக உள்ளது. பார் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2,50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் வெள்ளி 2 டாலர்கள் உயர்ந்துள்ள போதிலும், நம்மூர் சந்தையில் வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரையில் இம்மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ₹50,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!