News June 26, 2024
செல்போன் எண்ணை கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மக்களுக்கு சேவையாற்றி வசதியாக செல்போன் 81110 01999 என்ற செல்போன் எண்ணையும் vsmatheswaranofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார். இது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News September 9, 2025
நாமக்கல்: குழந்தையை கடித்து குதறிய நாய் !

நாமக்கல் : ராசிபுரம் அருகே 5 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள், குழந்தையின் கை கால் மற்றும் காதுகளை கடித்து குதறியதால், பலத்த காயம் ஏற்பட்டு, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, போன்ற வெறிபிடித்த தெருநாய்களை, பிடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென, குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .
News September 9, 2025
நாமக்கல் மாணாக்கர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நாமக்கல்லை அடுத்துள்ள பாச்சலில் தனியார் பள்ளியில் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது 9,12 மற்றும் 16 வயதுக்குட்பட்ட மாண மாணவிகள் இதில் பங்கேற்கலாம் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் சிறப்பு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News September 9, 2025
நாமக்கல்: கருவறையில் புதைந்திருந்த ஆச்சரியம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள பெரிய ஓங்காளியம்மன் திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்.08) கருவறையின் அருகே குழி தோண்டிய போது மூலவர் சிலைக்கு அடியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட பழைய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.