News March 9, 2026
செல்போனில் ஆபாச படம்.. ஐகோர்ட் வார்னிங்!

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை போனில் சேமித்து வைத்திருப்பது தண்டனைக்குரியது என்று கர்நாடக HC எச்சரித்துள்ளது. அவற்றை மற்றவர்களுக்கு பகிரவில்லை என்றாலும், வைத்திருந்தாலே POCSO, IT சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ளது. தனது மொபைலில் ஆபாச வீடியோக்களை சேமித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா?

போர் காரணமாக LPG சிலிண்டர்களுக்கு தட்டுபாடு நிலவும் நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. LPG தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது; வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், வீட்டு நுகர்வோருக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி சிலிண்டர் தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 12, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 12, மாசி 28 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News March 12, 2026
தனி சின்னத்திற்காக சமரசமா? வைகோ

PM மோடி 2029-க்கு பிறகு அவரது பதவி நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என வைகோ பேசியுள்ளார். தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காக சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு<<19354958>>, கட்சியின் பதிவை பாதுகாப்பதற்காக ஒரு தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம்.<<>> இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு தாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


