News April 25, 2024
செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
வத்தலகுண்டு அருகே நேர்ந்த சோகம்: பெண் பலி

வத்தலகுண்டு பழைய வத்தலகுண்டு பிரிவு பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய பெண்கள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் ரத்தினம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார். முத்துலட்சுமி(54), பிச்சையம்மாள்(53) படுகாயம் அடைந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடினார். வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
பழனி ரயில் நிலையத்தில் பயங்கரம்!

பழனி ரயில் நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
News November 22, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (21.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


