News December 23, 2025

செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

image

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 23, 2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (23.12.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பொதுமக்களிடமிருந்து 56 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், அ.சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

News December 23, 2025

BREAKING: கோயம்புத்தூரில் 300 பேர் கைது

image

கோவை மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய சட்டங்கள் தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்றன என குற்றம் சாட்டிய அவர்கள் முழக்கமிட்டனர். பின் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 23, 2025

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!