News September 2, 2025
செப்.03- ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

வரும் செப்.03- ல் சேலம் மாவட்டத்தில் மூலப்புதூர் ஆர்.கே.எஸ். திருமண மண்டபம், ஆட்டுக்காரன் வளவு கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம், செங்கரடு சமுதாயக்கூடம், குள்ளம்பட்டி சமுதாயக்கூடம், ஆத்தூர், ராணிப்பேட்டை, அண்ணா கலையரங்கம், நாச்சிப்பாளையத்தில் காளியம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
Similar News
News September 2, 2025
சேலம் நுண்ணறிவுப் பிரிவில் எஸ்.ஐ, ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம்!

சேலம் மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் ஒரே நாளில் 10- க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்து மாநகர காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ பாஸ்கர், அழகாபுரத்திற்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ மணிகண்டன், பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News September 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 1, 2025
சேலத்தில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,687 ஆக நிர்ணயம்!

செப்டம்பர் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை பட்டியலை இன்று (செப்.01) எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1,687 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 5-வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.