News September 1, 2025
செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

நாமக்கல்லில் செப்.3 நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.10 பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.17, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.20 பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.24, ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.
Similar News
News September 4, 2025
நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் 9 பேர் இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விருது வழங்குகின்றனர்.
News September 4, 2025
CM ஸ்டாலின் ஒப்பந்தம்; நாமக்கல் மக்களுக்கு ஜாக்பாட்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்டானியா கார்மென்ட் பேக் கேஜிங்கின் துணை நிறுவனமான பிரிட்டானியா ஆர்.எஃப்.ஐ.டி. டெக்னாலஜிஸ் இந்தியா, முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட உற்பத்திப் பிரிவை அமைக்க ₹520 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம், 550 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHAREit
News September 4, 2025
நாமக்கல் எம்.பியின் இன்றைய நிகழ்வுகள்!

நாமக்கல் எம்பி ராஜேஸ்குமார் இன்று பங்கேற்கும் நிகழ்வுகள் (செப்.4) உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆய்வு செய்தல், மதியம் 12.30 மணிக்கு காதபள்ளி, சமுதாயக்கூடத்திலும், 1.30 மணிக்கு எருமப்பட்டி முகாமிலும், 2.30 மணிக்கு ராசிபுரம் முகாமிலும், 3.30 மணிக்கு முள்ளுக்குறிச்சி முகாமிலும், பங்கேற்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பார்வையாளர்களை மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்திக்க உள்ளார்.