News November 23, 2025
‘சென்யார்’ புயல்: பெயரின் அர்த்தம் தெரியுமா?

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு ‘சென்யார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரபிக் மொழியில் சிங்கம் என அர்த்தம். பொதுவாக புயல்களுக்கு பெயர் சூட்ட ஒவ்வொரு நாடும் 5 பெயர்களை பரிந்துரைக்கும். அந்த பட்டியலில் இருந்துதான் IMD குறிப்பிட்ட பெயரை தேர்வு செய்கிறது. இந்த பெயரை UAE பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணலாமே.
Similar News
News February 10, 2026
கடும் வேதனையில் காங். தொண்டர்கள்: சோடங்கர்

CM ஸ்டாலினை சந்தித்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். காங்., எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்த தயாராக இருப்பதாகவும், துரதிர்ஷ்டவசமாக இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததால் தொண்டர்களும், தலைவர்களும் கடும் வேதனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 10, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசின் ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) எப்போது வரவு வைக்கப்படும் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இம்மாத இறுதி (அ) மார்ச் தொடக்கத்தில் தொகையை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, 2019 பிப்.1-ம் தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகளை திட்டத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
News February 10, 2026
முதலீடு செய்ய பிட்காயின் சிறந்தது: கியோசாகி

தங்கத்தை விட பிட்காயினில் முதலீடு செய்வதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்று முன்னணி முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி கூறியுள்ளார். தங்கம், பிட்காயின் இரண்டிலும் முதலீடு செய்வது சிறந்தது என்றாலும், எனது தேர்வு பிட்காயினாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிட்காயின்களை 21 மில்லியனுக்கு மேல் உருவாக்க முடியாது என்பதால் அதன் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.


