News August 21, 2025

சென்னை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

Similar News

News August 21, 2025

ரகுமான் கானின் நூல்கள் வெளியீடு

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 21, 2025

சென்னை: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

image

சென்னை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது <>இன்று நடக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில்<<>> கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

News August 21, 2025

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!