News March 26, 2024
சென்னை vs குஜராத் : மெட்ரோ சேவை நீட்டிப்பு

17வது ஐபிஎல் தொடரில், சென்னை – குஜராத் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை காண சென்னை மாநகர பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை காண்பித்து ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும், போட்டி முடிந்து வீடு திரும்ப ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் இன்று நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
தவெக சார்பில் இன்று போராட்டம்

வாக்காளர் சிறப்பு திருத்த குளறுபடிகளை (SIR) கண்டித்து தவெக சார்பாக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடைபெற உள்ள, நிலையில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
News November 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’

சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும்’ என்றார்.


