News February 27, 2026
சென்னை VGP தீம் பார்க்கில் விபத்து!

சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் நேற்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
மும்பை வரை சென்று தட்டித் தூக்கிய சென்னை போலீஸ்!

எம்.கே.பி. நகர் போலீசார் கடந்த டிசம்பர் 15-ம் தேதி வியாசர்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, 500 உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த சரத்குமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், இவருக்கு மாத்திரைகள் விற்பனை செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜாவேணு நாயக்கர் (46) என்பவரை மும்பையில் கைது செய்து, இன்று சென்னை அழைத்து வந்தனர்.
News February 28, 2026
சென்னை: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 28, 2026
சென்னை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

சென்னை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <


