News January 29, 2026
சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 18, 2026
சென்னை: தகாத உறவை கண்டித்ததால் தற்கொலை!

புளியந்தோப்பு, வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஷியாம் (25). இவர் திருமணமான ஓர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அப்பெண்ணுடன் கோவளம் சென்றவர், பிப்.13ஆம் தேதி வரை விடுதியில் தங்கியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அப்பெண்ணை அங்கேயே விட்டு இவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஷியாம், நேற்று(பிப்.17) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News February 18, 2026
நாய்கள் உரிமையாளர்களிடம் ரூ.3.27 லட்சம் வசூல்!

சென்னையில் நாய்கள் வளர்ப்போர்க்கு என விதிமுறைகள் மாநகராட்சியால் வகுக்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றாமல் இருந்த, 600க்கும் மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு, தலா 500 ரூபாய் என, 3.27 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், உரிமம் பெறாத, 71 நாய்களின் உரிமையாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் என ரூ.3.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
சென்னையில் EB பில் எகிறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


