News March 27, 2024
சென்னை: I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் எவர் வின் பள்ளி வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
Similar News
News February 18, 2026
சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 18, 2026
சென்னை: மழைநீர் வடிகாலுக்கு ரூ.693 கோடி!

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க ரூ.10கோடி மதிப்பில் பசுமை சென்னை திட்டம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.693 கோடி ஓதுக்கீடு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, ரூ.323 கோடி, பன்முக ஒருகினைப்பு போக்குவரத்திற்கு ரூ.40 கோடி, அவசர கால கட்டுபாட்டு மைய திட்டத்திற்கு ரூ.5 கோடி, கல்வி வளர்ச்சிக்கு ரூ.11 கோடி, சுகாதார துறைக்கு ரூ.4.35 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு ரூ.157 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளன.
News February 18, 2026
சென்னை மாநகராட்சியின் 90 அறிவிப்புகள்!

சென்னை மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியா இன்று(பிப்.18) வாசித்து நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. இந்த உரையின் போது மாநகர துறைகள் வாரியாக மொத்தம் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


