News November 22, 2025

சென்னை: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

image

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

Similar News

News November 22, 2025

சென்னை: அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு

image

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் சில அத்தியாவசிய மருந்துகள் தற்காலிகமாக கிடைக்காமல் உள்ளன. மாநில மருத்துவ சேவை அமைப்பு சில மருந்துகளின் வழங்கலை நிறுத்தியதால், மருத்துவமனைகள் தற்போது அவசியமான மருந்துகளை தனியார் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மருந்து பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 22, 2025

சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை கொளத்தூர் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 19ம் தேதியன்று இரவு புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். புகாரின் பேரில் M-3 புழல் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி பதிவுகள் மூலம் 15 வயது சிறுவனை கைது செய்து, நேற்று சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

News November 22, 2025

சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து!

image

சென்னை, நாளை (நவ.23) திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 7-மாலை 3.40 வரையில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.5 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து 2.25க்கு திருத்தணி செல்லும் மின்சார ரயிலும், சென்டிரலில் இருந்து காலை 6.50-2.40 வரை திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!