News September 24, 2025

சென்னை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

image

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, 6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தவும், செம்பியம் காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை எனவும் உடனடியாக அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு ஒப்படைக்கவும் உத்தரவு வழங்கப்பட்டது.

News September 24, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

வங்கக் கடல் பகுதிகளில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை முதல் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னைக்கு இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News September 24, 2025

JUST IN: பெருங்குடியில் பயங்கர தீ விபத்து

image

சென்னை OMR சாலை பெருங்குடியில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியதால் போக்குவரத்து பாதிப்படைந்து. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!