News January 20, 2026

சென்னை: 24ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன-20) வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். பின் வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்.

Similar News

News January 28, 2026

4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு – முதல்வர்

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ’திமுக ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் 4,000-வது குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்வோருக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 28, 2026

சென்னை ஒன் செயலி: 40லட்சம் டிக்கெட் விற்பனை

image

சென்னை ஒன் செயலி மூலம் இதுவரை 40லட்சம் டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை ஒன்றாக இணைக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த செயலி மூலம் 40லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 28, 2026

சென்னை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

சென்னை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!