News December 26, 2025

சென்னை: 15000 போலிசார் பாதுகாப்பு பணி!

image

இன்று (டிச-26) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் மெரினாவில் 1000 போலிசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

Similar News

News January 2, 2026

சென்னை: கோயிலுக்கு சென்றவர் பலி!

image

சென்னை, M.G.R.நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (27) கார் மெக்கானிக்காக உள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இவரது தோழியுடன் கோயிலுக்கு மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக சென்ற போது, எதிரே வந்த மற்றொரு டூவீலரின் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழியும், எதிர்த் திசையில் வந்த இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மதிவாணன் (29) அங்கிருந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மதிவாணனை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

image

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

error: Content is protected !!