News December 20, 2025
சென்னை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 21, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடசென்னை வளர்ச்சி திட்ட பணியின் கீழ், திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் கட்டுமான பணி நடைபெறுகிறது. எனவே, நாளை டிச. 22ம் தேதி காலை 10 மணி முதல் 24ம் தேதி காலை 10 மணி வரை திருவொற்றியூர் மற்றும் மணலி நீருந்து நிலையங்கள் செயல்படாது. இந்த 2 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்’ என கூறியுள்ளது.
News December 21, 2025
சென்னை: பிரபல ரவுடி கைது!

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நியூ பேரன்ஸ் சாலையில் பொதுமக்களை ரவுடி ஒருவர் மிரட்டுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையை சேர்ந்த அருண் (எ) அப்பு (35) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 21, 2025
மின் கம்பியாள் பணி தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளர் பதவிக்கான தகுதிகாண் தேர்வு வடசென்னை, அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டிச.27,28ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் விவரங்கள், தேர்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


