News December 25, 2025
சென்னை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ!

சென்னை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 6, 2026
சென்னையில் இன்று முதல் அமல்

சென்னையில் டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், ரூ. 10-வழங்கும் திட்டம், இன்று (ஜன. 06) முதல் அறிமுகமாகிறது. பொதுவெளியில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தவிர்த்து, சுற்று சூழல் மற்றும் மாசை குறைப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 செலுத்தி, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது, ரூ. 10-த்தை திரும்ப பெறலாம்.
News January 6, 2026
சென்னை: தேர்வு கிடையாது.. கோயிலில் SUPER வேலை…

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவலர், இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய 8th,10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000- ரூ58,600 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. <
News January 6, 2026
BREAKING: சென்னையில் பால் விலை உயர்வு?

அம்பத்தூர் ஆவின் தயாரிப்பு நிலையத்தில் பால் பாக்கெட் விலையை திடீரென உயர்த்தி இருப்பதாக சென்னை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் பால் ரூ.44-க்கு விற்பனை செய்து வந்த நிலையில், இன்று ரூ.50? விற்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் பச்சை நிற பால் பாக்கெட் ஏற்கெனவே விற்பனையில் உள்ள நிலையில், கிரீன் மேஜிக்+ விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


