News January 9, 2026

சென்னை: வீட்டு பட்டாவில் திருத்தமா? அலைய வேண்டாம்

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 11, 2026

42.82 மெட்ரிக் டன் கழிவுகள் எரிப்பு

image

சென்னை மாநகராட்சியில் வீடுகளில் சேரும் பழைய சோஃபா, மெத்தை மற்றும் மரச்சாமான்கள் போன்ற கழிவுகளைச் சனிக்கிழமைதோறும் அகற்றும் திட்டத்தின் கீழ், இதுவரை 1,769 பேரிடமிருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (ஜன. 10) மட்டும் 42.82 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டன.

News January 11, 2026

சென்னையில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

சென்னை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

மெரினாவுக்கு போறீங்களா? இதை மட்டும் செய்யாதீங்க!

image

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஷேர்!

error: Content is protected !!