News December 26, 2025

சென்னை: வீடு புகுந்து தாய்-மகனுக்கு வெட்டு!

image

சென்னை வியாசர்பாடியில் எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த சூர்யா (19) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கியது. இந்த சம்பவத்தின் போது மகனைத் தடுக்க முயன்ற தாய் சாந்திக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

சென்னை: 15000 போலிசார் பாதுகாப்பு பணி!

image

இன்று (டிச-26) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் மெரினாவில் 1000 போலிசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

News December 26, 2025

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

image

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல், 19ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவது, வரும் ஜன., 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. என்.என்.என் இதில், தகுதியான குடிமக்கள் விண்ணப்பிக்க வசதியாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 27, 28, ஜன., 3, 4ஆகிய தேதிகளில்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!