News April 26, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <
Similar News
News July 7, 2025
மது போதையில் பாலியல் பலாத்காரம்

சென்னையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.
News July 6, 2025
சென்னை பெருநகரில் ஜூலை 21 வரை வாரண்டின்றி கைது

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என சந்தேகப்பட்டால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய பிரிவு 41-ன் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவு ஜூலை 6 இரவு 12 மணி முதல் ஜூலை 21 இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
வெளிநாட்டு ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் கோடாலி தைலம் இறக்குமதி வழக்கில், உரிமம் இல்லாததால் சுங்கத்துறை தடை விதித்தது. இறக்குமதியாளர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருந்து இறக்குமதியில் பொதுநலனே முக்கியம் எனவும் உரிய உரிமம் பெற்ற பின்னரே சரக்குகளை விடுவிக்க முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது.