News July 31, 2024
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 20, 2025
சென்னையில் மெட்ரோ QR டிக்கெட் சேவை பாதிப்பு

சென்னை மெட்ரோ ரயில் QR டிக்கெட் பெறுவதில் இன்று காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நேரடியாக கவுண்டர்கள் மற்றும் வாட்ஸப் செயலி மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும், சி.எம்.ஆர் அட்டைகள் மூலமாகவும் பயணிக்கலாம் எனவும், நுட்ப வல்லுனர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
சென்னை: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <<-1>>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்.
News September 20, 2025
சென்னை மக்களே கவனமா இருங்க

சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வைரஸ் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர் பகுதியில் ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் நோய் அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளது.