News January 11, 2026

சென்னை: வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

image

சென்னை கிண்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பாண்டியன், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று (ஜன.10) தீர்ப்பளித்தார்.

Similar News

News January 30, 2026

சென்னை: உங்க whatsapp பாதுகாப்பா இருக்கா?

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

சென்னை: உள்ளாட்சிகளுக்கு பெரும் நெருக்கடி

image

பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சுற்றி 1 கி.மீ. வரை கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட 16 கிராமங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், அனுமதிக் கட்டணமாக ரூ.1 – ரூ.20 லட்சம் வரை செலுத்திய விண்ணப்பதாரர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு உள்ளாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உத்தரவு வந்தபின் பணம் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

சென்னையில் இன்று இங்கெல்லாம் மின் தடை!

image

சென்னை, செம்பியம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, KKR எஸ்டேட், மிஸ்டிக் காலனி, KKR நகர், கல்கத்தா கடை, VOC தெரு, நவீன் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டிவிகே தெரு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!