News April 1, 2024
சென்னை வானிலை மையம் அறிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி , குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள RBI சுரங்கப்பாதை வரையிலான சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் கார்னர் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 15, 2025
சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,100 போலீசார்!

தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை & அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், 9.100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 15, 2025
பிராட்வே கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

நாளை 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இச்சுகந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் முகத்தில் இந்திய மூவர்ணக் கொடி வடிவங்களும், தேசியச் சின்னங்களும் தீட்டிக் கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.