News April 17, 2025
சென்னை வாசிகளே! இந்த வாய்ப்புகளை தவறவிட வேண்டாம்

சென்னை ஐகோர்ட்டில் (mhc.tn.gov.in/recruitment/login) 152 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,700-ரூ.58,100. சென்னை IIT-யில்(iitm.ac.in) 2 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.14,000-ரூ.40,000. சென்னை கலாஷேத்ராவில்(kalakshetra.in) 2 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.18,000-ரூ.56,900. சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில்(www.imsc.res.in) 4 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.20,000-ரூ.75,000. *வேலைதேடுவோருக்கு பகிரவும்
Similar News
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <
News April 19, 2025
3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
News April 19, 2025
குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம்

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, நேற்று (ஏப்.18) தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் குழாய் மூலம் வீட்டு சமையல் எரிவாயு வழங்கப்படும் என தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.