News April 26, 2024

சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்துக்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை என ஆங்காங்கே புகார் எழுந்தது. இந்நிலையில் எம்.டி.சி நிர்வாகம் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Similar News

News March 6, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

சனிப்பெயர்ச்சி: சென்னையில் செல்ல வேண்டிய கோயில்!

image

சென்னையை அடுத்த பொழிச்சலூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம். இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடல்!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் B1, B2 மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளது. மேலும், மார்ச் 9 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!