News September 26, 2025

சென்னை வருகிறார் குடியரசுத் துணை தலைவர்

image

குடியரசுத் துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கடந்த 12ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு முதன் முதலில் வரும் 4-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு அரசு சார்பிலும், தமிழ்நாடு பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சார்பிலும் குடியரசுத் துணை தலைவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 5ம் தேதி அவர் கோவையில் தனது வீட்டிற்கு செல்கிறார்.

Similar News

News January 2, 2026

BREAKING: வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ தவெக-வில் இணைவு

image

சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் இணைந்துள்ளார். ஜே.சி.டி பிரபாகர் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு 10,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

News January 2, 2026

ஆசிரியர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

image

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்றைய (ஜன.01) போராட்டத்தின்போது ஆசிரியர்கள் சிலரை காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

News January 2, 2026

மத்திய கைலாஷ் மேம்பாலம் ஜன இறுதியில் திறப்பு!

image

சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா ஜன மாதம் இறுதியில் பொங்கல் பிறகு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 650 மீட்டர் நீளத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2025 அக்டோபர் மாதம் முடிவடைந்து குறிபிடதக்கது.

error: Content is protected !!