News February 26, 2026

சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோருக்கு குட் நியூஸ்!

image

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே மார்ச் 10 முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 4.5 கி.மீ நீளமுள்ள பாதையில் ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய இரண்டு புதிய நிலையங்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்தத் திட்டம் தற்போது பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 28, 2026

சென்னையில் 22 காவல் துறையினர் பணி நிறைவு விழா

image

சென்னை கமிஷனர் அருண், உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) கே.ஜோஷி நிர்மல் குமார், நேற்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் பணி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சென்னை பெருநகர காவலில் 26 முதல் 40 ஆண்டுகள் வரை சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் 22 காவல் துறையினரை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து சான்றிதழ்கள் வழங்கினர்.

News February 27, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.85,000 முதல் ரூ.1,45,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். மேலும் பதவிக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!