News September 23, 2025

சென்னை: லிப்டில் சிக்கி ஊழியர் பலி

image

சென்னை ராயப்பேட்டை EA வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், ஹைட்ராலிக் லிப்ட் கோளாறு காரணமாக தொழில்நுட்ப பொறியாளர் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். ஹைட்ராலிக் சிசர் லிப்டில் ஏறி, ப்ரொஜெக்டரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, லிப்ட் தானாகவே மேல்நோக்கிச் சென்று மேற்கூரையில் இடித்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

News September 23, 2025

முதல்வர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

image

சென்னை அண்னா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாக்குத் திருட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் எம். பி.க்கள் வாரத்தில் நான்கு நாட்கள் தொகுதியில் தங்கி வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

News September 23, 2025

சென்னை ஒன் செயலிக்கு வரவேற்ப்பு

image

சென்னை ஒன் செயலி மூலம் பஸ்,ரயில், மெட்ரோ ரெயில்களில் இன்று காலை வரை 4395 பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் 2382 பேர் மாநகர பேருந்துகளிலும், 1214 பேர் மின்சார ரயில்களிலும், 799 பேர் மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்துள்ளனர். இந்த செயலியை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

error: Content is protected !!