News October 12, 2025
சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
Similar News
News October 12, 2025
சென்னை சென்ட்ரல் – மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு சேவை

கேரள மாநிலம் கொச்சியில் இருப்பது போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நீர்வள ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளதோடு முறையாக பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்துவதற்கான வரைவையும் சென்னை பெருநகரம் சார்பில் சமர்ப்பிக்கவுள்ளது. உங்க கருத்து என்ன?
News October 12, 2025
சென்னையில் உள்ளவர்களுக்கு இனி அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News October 12, 2025
பெசன்ட் நகரில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நேற்று குளிக்கும் போது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவரின் சடலம், இன்று (அக்.12) காலை பட்டினப்பாக்கம் பகுதியில ஒதுங்கியது. மெட்ராஸ் பொருளாதாரக் கல்லூரியில் படிக்கும் உ.பி.யைச் சேர்ந்த ரோஹித் சந்திரா (21) என்பவரின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அலையில் சிக்கிய கவின் பிரசாந்த் என்ற மாணவனின் சடலம், எலியட்ஸ் கடற்கரையில் ஒதுங்கியது.