News November 6, 2025

சென்னை: ரேஷன் கார்டு இருக்கா? நாளை சூப்பர் வாய்ப்பு!

image

சென்னையில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி-பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 6, 2025

சென்னை: 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

image

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் – வினிஷா தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 4-வதாக மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஸ்ரீதர்-வினிஷா தம்பதியினர் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

சென்னை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

சென்னை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

சென்னை: புலனாய்வுத் துறை வேலை, ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இந்த <>லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!