News February 28, 2026

சென்னை: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு <<>>க்ளிக் செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

Similar News

News February 28, 2026

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோவுக்கு அனுமதி

image

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி -வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News February 28, 2026

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்

image

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு சென்னை வருகிறார். இரவு 8.40 மணிக்கு வரும் அவர், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இரவு தங்குகிறார். அங்கு பிரதமர் மோடியை பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.

error: Content is protected !!