News September 28, 2025

சென்னை: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

Similar News

News January 6, 2026

6,300 டன் திடக்கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 781 பூங்காக்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் மற்றும் 1,000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, 05.01.26 அன்று 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மை பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று பூங்காக்களில் தேவையற்ற செடிகள், அகற்றப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

News January 6, 2026

சென்னையில் இன்று முதல் அமல்

image

சென்னையில் டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், ரூ. 10-வழங்கும் திட்டம், இன்று (ஜன. 06) முதல் அறிமுகமாகிறது. பொதுவெளியில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தவிர்த்து, சுற்று சூழல் மற்றும் மாசை குறைப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 செலுத்தி, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது, ரூ. 10-த்தை திரும்ப பெறலாம்.

News January 6, 2026

சென்னை: தேர்வு கிடையாது.. கோயிலில் SUPER வேலை…

image

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவலர், இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய 8th,10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000- ரூ58,600 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. <>இந்த <<>>லிங்கில் ஜன.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!