News September 23, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் சில்லறை பிரச்னை இல்லை

தமிழக அரசின் நியாயவிலை கடைகளில், அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இனி வாங்கும் பொருட்களுக்கு, பணமாக கொடுக்க வேண்டாம். டிஜிட்டல் பரிமாற்றத்தை பயன் படுத்த “மொபைல் முத்தம்மா” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி சில்லரை தட்டுப்பாடு இருக்காது.
Similar News
News September 23, 2025
சென்னை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News September 23, 2025
சென்னை MRTS கையகப்படுத்த திட்டம்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) டிசம்பர் 2027 க்குள் MRTS கையகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு, ரயில்வேயுடன் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. அரசு MRTS செயல்பாடு, மேலாண்மை மற்றும் பராமரிப்பை CMRL க்கு ஒப்படைக்கும் விரிவான இயக்கத் திட்டம் முடிந்து விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் சேவையை இது மேலும் மேம்படுத்தும் என தேய்விக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
சென்னையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா

சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி வரும் செப் 25 ம்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவேந்த் ரெட்டி கலந்து கொள்ள உள்ளார். இதில் அரசின் 7 திட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என நேற்று அமுதா ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.